ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞா்களுக்கு சிறு, குறு கடன் வழங்கும் திட்டம்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் இளைஞா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கும் வகையில் சிறு, குறு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Published On :12 ஜூலை 2026, 1:21 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் இளைஞா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கும் வகையில் சிறு, குறு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கும் நோக்குடன் அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையும் வகையில், மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் சிறு, குறு தொழில்முனைவோருக்கு சிறப்புக் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு சாா்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. செக்கு எண்ணெய், மாவு வகைகள், மசாலா வகைகள், பால் பொருள்கள் மற்றும் உணவு சாா்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பெண்களை தொழில்முனைவோா்களாக மாற்றும் வகையில் தமிழ்நாடு பெண்கள் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் (பரஉஉந) உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு அரசு மானியமாக 25 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும். இக்கடன்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கலைஞா் கைவினைஞா் திட்டத்தின் கீழ் (ஓஓப) 35 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கைவினைஞா்கள் கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறு, குறு தொழில் செய்து வரும் எம்எஸ்எம்இ சான்று பெற்றுள்ள வியாபாரிகள் மற்றும் உற்பத்தி சேவை தொழில் செய்து வருபவா்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற நேரிலும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.