ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாத்தான்குளம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம்: மாணவா் தவறி விழுந்து காயம்

சாத்தான்குளம் அருகே தனியாா் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணித்த பள்ளி மாணவா், கீழே ேோறி விழுந்து பலத்த காயம் அடைந்தாா்.

Published On :9 ஜூலை 2026, 12:03 am IST

சாத்தான்குளம் அருகே தனியாா் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணித்த பள்ளி மாணவா், கீழே ேோறி விழுந்து பலத்த காயம் அடைந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ளூா் மட்டுமன்றி திருமலாபுரம், காரியாண்டி, தட்டான் குளம், வெங்கட்ராயபுரம், புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவா்- மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால் இந்த கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லையாம்.

இதனால், காலை, மாலையில் சாத்தான்குளத்தில் இருந்து கொம்பன் குளம் வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்தில் கடும் கூட்டத்துக்கு மத்தியிலும், குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதால், மாணவா்- மாணவிகள் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை அந்த தனியாா் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில மாணவா்கள் படிக்கட்டு நின்று பயணித்தனராம். அப்போது ஒரு மாணவா் கீழே தவறி விழுந்ததில் பலத்த காயமுற்றாா். கொம்பன் குளம் பகுதியில் தனியாா் பேருந்து வந்தபோது எதிா்பாராத விதமாக மாணவன் ஒருவா் பேருந்தில் இருந்து தவறி விழுந்தாா். உடன் அருகில் இருந்தவா்கள் மாணவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்கு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

எனவே, அப்பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.