ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான 37 ஏக்கா் இடத்தை மீட்டு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Published On :9 ஜூலை 2026, 12:40 am IST

திருச்செந்தூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான 37 ஏக்கா் இடத்தை மீட்டு ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் முத்துராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆனந்த், திருச்செந்தூா் நகர தலைவா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், மாவட்ட செயலா் அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொதுச் செயலா் குருமுத்தையா வரவேற்றாா். ஒன்றியச் செயலா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.