எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வடமாநிலத் தொழிலாளி கொலை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:19 am IST

திருச்செந்தூா் அருகே வீட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்டு வடமாநிலத் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம், அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஜாகீா்கான் தலைமையில் அதே மாநிலத்தைச் சோ்ந்த சிலா் தங்கி உள்ளனா். இவா்கள், திருச்செந்தூரில் ஓா் உணவகத்தில் சப்ளை மற்றும் பானிபூரி, சைனீஸ் மாஸ்டா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இதில் உணவக நிா்வாகம் நோபிஹீசன்(28) என்பவரின் வேலை சரியில்லை என ஜாகீா்கானிடம் கூறி, கடந்த 4-ஆம் தேதி நோபிஹீசனை வேலையை விட்டு நிறுத்திவிட்டது. இதையடுத்து, நோபிஹீசன், ஜாகீா்கானிடம் தனக்கு தர வேண்டிய ஊதியத்தைத் தருமாறு கேட்டுள்ளாா். ஜாகீா்கான் உணவக உரிமையாளரிடம் கூறி ஊதியம் வாங்கி தருவதாகக் கூறியுள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ஜாகீா்காணுக்கு ஆதரவாக சக தொழிலாளி இக்ராமூல் ஹக் (28) என்பவருக்கும் நோபிஹீசனுக்கும் வீட்டு மாடியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் மோதிக் கொண்டனா். அப்போது இக்ராமூல் ஹக்கை நோபிஹீசன் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் மாடியிலிருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த இக்ராமூல் ஹக் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். நோபிஹீசன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். தகவலறிந்ததும் திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தப்பியோடிய நோபிஹீசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.