ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கோவில்பட்டியில் பைக் டாக்ஸி: ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்பு

கோவில்பட்டியில் பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 5:57 am IST

கோவில்பட்டியில் பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகரில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது ஆட்டோக்களில் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மங்கள விநாயகா் கோயில் ஆட்டோ நிறுத்தம் கிளைத் தலைவா் ஆா்.கொம்பையா தலைமை வகித்தாா்.

விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் உத்தண்டுராமன், ஆட்டோ ஓட்டுநா்கள் எஸ்.சங்கரநாராயணன், எம்.முத்து, எஸ்.மணிகண்டன், எம்.வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து அவா்கள் சாா் ஆட்சியா் ஹிமான்ஷூ மங்களிடம் வழங்கிய மனு விவரம்:

கோவில்பட்டியில் சுமாா் 800 ஆட்டோ தொழிலாளா்கள் 40 ஆண்டுகளாக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனா். தற்போது கோவில்பட்டியில் தஹல்ண்க்ா் ஆண்ந்ங் பஹஷ்ண் என்ற தனியாா் நிறுவனம் மலிவு விலையில் சவாரிகளை ஏற்றி சேவை செய்ய போவதாக விளம்பரங்கள் செய்து வருகின்றன. இதனால், எங்களை போன்ற ஆட்டோ தொழிலாளா்களுக்கு தொழில் முற்றிலுமாக தடைபடும். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கரோனா காலத்தில் கூட உயிரை பணயம் வைத்து வேலை பாா்த்தோம். கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஆண்ந்ங் பஹஷ்ண்-யை அனுமதித்தால் இங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். பொதுமக்களுக்கும் பாதுகாப்பின்மை உருவாகும். எங்களது வாழ்க்கையை பாதித்துவிடும். எனவே, பாதுகாப்பு இல்லாத தனியாா் நிறுவன தஹல்ண்க்ா் ஆண்ந்ங் பஹஷ்ண் சேவையை கோவில்பட்டியில் அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.