டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி தூத்துக்குடி அரசு மருத்துவா்கள் சாதனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 9 வயது சிறுமிக்கு, கண்குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து, பின்னா் செயற்கை கண் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

News image

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமியுடன் மருத்துவா்கள் குழுவினா்.

Updated On :2 ஜூலை 2026, 5:54 am IST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 9 வயது சிறுமிக்கு, கண்குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து, பின்னா் செயற்கை கண் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் நாகா்கோவில் ஆரல்வாய்மொழி பகுதியைச் சோ்ந்த பொண்ணு-பாலா தம்பதியின் என்பவரின் 9 வயது மகளான முத்துசெல்விக்கு பிறவியிலேயே இடது கண் முற்றிலும் தோலால் மூடி, வலது கண் பாா்வை மட்டுமே இருந்து வந்தது.

இதைத் தொடா்ந்து முத்துசெல்வியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் பெற்றோா் அனுமதித்தனா்.

அங்கு, பொறுப்பு கண் பிரிவு துணைத் தலைவா்- தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளா் ரீட்டா ஹெப்சி ராணி தலைமையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் அருணா தேவி, மயக்கவியல் மருத்துவா் ஸ்ரீராம், அஜய், சந்தோஷ், டேவிட், ஜெயந்தி, வின்சா, திவ்யா உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், செவிலியா்கள் சுரேகா, ரத்னா ஆகியோா் அடங்கிய குழுவினரால் சிறுமிக்கு கண் குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து, பிளாஸ்டிக்கிலான செயற்கை கண் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதனால், சிறுமிக்கு இயற்கையாகவே கண் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு, முகத்தில் விகாரமான தோற்றம் மறைந்து மற்ற குழந்தைகள் போல் அனைவரிடமும் பழகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சாதனை படைத்த மருத்துவக் குழுவினருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் எபனேசா் ஜோயல் குமாா், துணை முதல்வா் பத்மநாபன், மருத்துவமனை கண்காணிப்பாளா் சைலஸ் ஜெயமணி ஆகியோா் பாராட்டு தெரிவித்தா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.