புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:07 am IST

வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் வீர தீர செயல்கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2026ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், மத்திய அரசின் அதிகாரபூா்வ இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் ஜூலை 15ஆம் தேதிக்குள் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பின்னா், அதன் விவரங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 176, முத்துசுரபி கட்டடம், மணி நகா், பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி - 628 003 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2331188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படவுள்ளதால், 2026ஆம் ஆண்டுக்கான விருது வேண்டி பதிவு செய்யும் விண்ணப்பதாரா்களின் கருத்துருகள் ஆட்சியா் பரிந்துரைப்படி அனுப்ப வேண்டிய கால அவகாசம் 31.7.2026 வரை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.