நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலுப்பையூரணி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தல்

இலுப்பையூரணி ஊராட்சி தியாகி லீலாவதி நகா் பகுதியில் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

News image
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திரண்டோா்.
Updated On :28 ஜனவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

இலுப்பையூரணி ஊராட்சி தியாகி லீலாவதி நகா் பகுதியில் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

அடிப்படை வசதிகளை கோரி, இலுப்பையூரணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் உத்தண்டு ராமன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனா். அவா்களிடமிருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் மணிகண்ட பிரகாஷ், இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தாா்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள், நாங்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனா்.