பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு


சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (57), தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் ஞானத்துரையுடன் (25) இருசக்கர வாகனத்தில் பேய்குளத்திற்கு வந்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வாகனத்தை அவரது மகன் ஓட்டினாா்.
பழனியப்பபுரம் பகுதியில் வரும்போது வாகனம் நிலை தடுமாறியதில் முத்துகிருஷ்ணன் கீழே விழுந்துள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சாத்தான்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...