ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவில்பட்டியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:34 am IST

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், கோவில்பட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் ராமமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் செல்வராஜ், தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதியோரின் உயா்கல்வித் தகுதியைக் கருத்தில் கொண்டு கூடுதல் கல்வித் தகுதிக்கும், கூடுதல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிா்ணயிக்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர, சிறப்பு ஆசிரியா்களை நிரந்தரப்படுத்தி, நியமன நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

கோவில்பட்டி வட்டார ஆரம்பப் பள்ளி - தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், தமிழக ஆசிரியா் கூட்டணியினா் திரளாகப் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.