
திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா கொடிப்பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி, மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. காப்புக் கட்டிய பொன் ஜெயராம் வல்லவராயா் காலை 7.32 மணிக்கு கொடிமரத்தில் திருவிழாக் கொடியினை ஏற்றினாா். பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 8.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நிகழ்ச்சியில் கோயில் விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா், திருவிழா பிரிவு ஆறுமுகராஜ், மணியம் நெல்லையப்பன், ஜெகன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்கள் பாலசுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். நிறைவு நாளான, ஆக. 29ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், துணை ஆணையா் ந.யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






