
கோவில்பட்டியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் புதன்கிழமை முதல் நீதிமன்றப் பணி புறக்கணிப்பைத் தொடங்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் புதன்கிழமை முதல் நீதிமன்றப் பணி புறக்கணிப்பைத் தொடங்கினா்.
கோவில்பட்டியில் வழக்குரைஞா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோவில்பட்டி-மஞ்சு தோப்பு சாலையை சரி செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா் ரவிக்குமாரை தாக்கியதாக மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நியூட்டன் ஜெபராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆக. 19 முதல் 22ஆம் தேதி வரை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது, ஆா்ப்பாட்டம் நடத்துவது மற்றும் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தொடா்ந்து, வழக்குரைஞா் சங்க அலுவலகம் முன் சங்கச் செயலா் சங்கா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வாளா் மாரியப்பனிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






