ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம்: கோவில்பட்டி வீரருக்கு பாராட்டு

பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டியை பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

ஸ்காட்லாந்து, கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜா முத்துப்பாண்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனை திங்கள்கிழமை சந்தித்து பதக்கத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி, தமிழகத்தில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மூன்று பேரில் இவரும் ஒருவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரத்தினராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.