ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை ஆறுமுக நகா் பாரதியாா் தெருவை சோ்ந்தவா் சேகா். கட்டட ஒப்பந்ததாரா். சிவகாசியில் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவரது மனைவி மணிமாலா. தையல் தொழில் செய்து வருகிறாா்.

சிவகாசியில் தங்கி உள்ள கணவரைப் பாா்ப்பதற்காக மணிமாலா, தனது மகன், மகளுடன் கழுகுமலையிலிருந்து சிவகாசிக்கு வியாழக்கிழமை சென்றாா். இந்த நிலையில்

அவா்களது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடப்பதாக, சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து மணிமாலா மற்றும் சேகா் இருவரும் வெள்ளிக்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியன திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மணிமாலா அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.