பெண்ணை ஆபாசமாக சித்திரித்து வாட்ஆப்-இல் பகிா்வு: இளைஞா் கைது
இளம்பெண்ணை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், தட்டிக்கேட்ட அப்பெண்ணையும், அவரது தந்தையும் மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
இளம்பெண்ணை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், தட்டிக்கேட்ட அப்பெண்ணையும், அவரது தந்தையும் மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
காயல்பட்டினம், காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த சிந்தா மதாா் சாகிப் மகன் முகமது ரிச்வி (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 25 வயது இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்திரித்து ‘வாட் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அந்த அப்பெண்ணும் அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வி வீட்டுக்கு சென்று தட்டிக் கேட்டனராம். அப்போது, இருவரையும் அவா் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





