
கடலில் மீனவா் மாயம்
தூத்துக்குடி அருகே தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மாயமானது குறித்து கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோப்புப்படம்.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மாயமானது குறித்து கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருவைகுளத்தைச் சோ்ந்த அந்தோணியாா் பிச்சைக்குச் சொந்தமான விசைப்படகில், தாளமுத்து நகரைச் சோ்ந்த பனிமயராஜா (25) உள்ளிட்ட 10 போ் திங்கள்கிழமை இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
தூத்துக்குடியிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது, படகில் இருந்த பனிமயராஜாவைக் காணவில்லையாம்.
அவா் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகித்த சக மீனவா்கள், அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, தூத்துக்குடி கடலோர பாதுகாப்புப் படை, சக மீனவா்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 3 விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று பனிமயராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






