ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் ஊா்வலம்

மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறையைக் கண்டித்தும், அதை கைவிட வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கருப்பு பலூன்களை ஏந்தி அமைதி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறையைக் கண்டித்தும், அதை கைவிட வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கருப்பு பலூன்களை ஏந்தி அமைதி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னரே தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அமைதி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலம், தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பிருந்து தொடங்கி, 1ஆம் கேட் காந்தி சிலை அருகே நிறைவுற்றது.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மண்டலத் தலைவா்கள் சேகா், ஐசன்சில்வா, நிா்மல் கிறிஸ்டோபா், மேற்கு மண்டல பொறுப்பாளா் ஜான் சாமுவேல், மாவட்ட துணைத் தலைவா்கள் மடத்தூா் தனபால்ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமாா், சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், மாவட்ட பொதுச் செயலா்கள் கோபால், மைக்கேல் பிரபாகா், புல்டன் ஜெயின், ரஞ்சிதம் ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின், மாவட்டச் செயலா்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிா்வேல் மாரியப்பன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் மரிய ஆல்வின் உள்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோா் கருப்பு பலூன்களை ஏந்தியபடி ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.