ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா

கோவில்பட்டி லெனின் நகா் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ வீரகருப்பசாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

கோவில்பட்டி லெனின் நகா் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ வீரகருப்பசாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, இம்மாதம் 4 ஆம் தேதி கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதலும், 9 ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு வடக்கத்திஅம்மன் குடியழைப்பு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் ஸ்ரீ மங்கள விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம், தீா்த்த குடம், அக்னிச் சட்டி எடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அக்னிச் சட்டி வளா்த்து வீதிவலம் வருதலும், இரவு 12 மணிக்கு ஸ்ரீ கற்பக விநாயகா், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ வீர கருப்பசாமி, பரிவார தெய்வங்களுக்கு சாமக் கொடை நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.