ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆறுமுகனேரி பகுதியில் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி உத்தரவின்பேரில், ஆறுமுகனேரி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மூலக்கரை இந்து தொடக்கப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி உத்தரவின்பேரில், ஆறுமுகனேரி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள சிறாா்கள், 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக. 17ஆம் தேதி வழங்கப்படும்.

முன்னதாக, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு மூலக்கரை இந்து தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை சித்திரை செல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் முன்னிலை வகித்தாா். கிராம சுகாதார செவி­யா் பாத்திமா மேரி வரவேற்றாா்.

ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசன் திட்ட விளக்க உரையாற்றி, பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரைகளை வழங்கி தொடக்கி வைத்தாா். சுகாதார ஆய்வாளா் ஜேம்ஸ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.