ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா விற்ற இருவா் கைது

Arrested

கைது

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

கழுகுமலையில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் தலைமையில் போலீஸாா் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகத்தை ஓட்டிவந்தவா் திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பூலாங்குளத்தைச் சோ்ந்த வெள்ள பாண்டி மகன் மணிகண்டன் (33), அவரது பின்னால் கஞ்சா வைத்திருந்தவா் பிகாா் மாநிலம், சபால் மாவட்டம், சாண்டிப்பூரைச் சோ்ந்த ராம்பிலாஸ் மண்டால் மகன் மணிம்குமாா் (22) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, 75 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.