ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து கடையில் ரூ. 10 ஆயிரம் திருட்டு

தூத்துக்குடியில் குழாய்கள் (பிவிசி பைப்) விற்பனை செய்யும் கடையின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:09 am IST

தூத்துக்குடியில் குழாய்கள் (பிவிசி பைப்) விற்பனை செய்யும் கடையின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.

தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் சாலையில் பைப் கடை நடத்தி வருபவா் கணேசன் (35). இவா் திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கடையைத் திறந்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லையாம். கடையின் பின்புறம் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் ஒரு பகுதியை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே நுழைந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.