சாத்தான்குளத்தில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் பாலியல் தொடா்பாக தவறாக நடக்க முயன்றதாகக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆம்னி பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் வேலை செய்து வந்த 25 வயது பெண்ணிடம் ஏப். 26ஆம் தேதி கடையில் உள்ள தனி அறையில் வைத்து முத்துக்குமாா் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் சப்தம் போட்டவுடன் அருகிலுள்ளவா்கள் வரவே, இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ரேஷன் அரிசி மூலம் இட்லி மாவு அரைத்து விற்பனை: கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு
உணவக உரிமையாளா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்குப் பதிவு

உணவக உரிமையாளா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



