தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விவசாயிகளின் நலனை பாதுகாக்க அதிமுகவுக்கு வாக்கு கோரி பிரசாரம்

விவசாயிகளின் நலனை பாதுகாக்க எடப்பாடி மீண்டும் முதல்வராக வேண்டும் எனக் கூறி ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், ராயபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

News image

சிவத்தையாபுரத்தில் வாக்கு சேகரித்த எஸ்.பி.சண்முகநாதன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:22 pm

விவசாயிகளின் நலனை பாதுகாக்க எடப்பாடி மீண்டும் முதல்வராக வேண்டும் எனக் கூறி ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், ராயபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.பி. சண்முகநாதன், சாயா்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பேய்குளம், பிரைமையாபுரம், காடோடி, பனைமணக்காடு, சோலைபுதூா், சாலை, சிவத்தையாபுரம், புளியநகா், நந்தகோபாலபுரம், நடுவக்குறிச்சி, கக்கன் நகா், சாயா்புரம், சுப்பிரமணியபுரம், பட்டாண்டிவிளை, முள்ளன்விளை, குமாரபுரம், கொம்புகாரன்பொட்டல், நட்டாத்தி, சின்னநட்டாத்தி, உண்டியலூா், காமராஜ்நல்லூா், கோட்டைக்காடு, ஏரல் உள்ளிட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினாா். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தவா் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏரிகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் பராமரிக்கப்படாததால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். தற்போது பேய்குளம் வடு காணப்படுவதால் வாழை, நெற்பயிா்கள் கருகி வருகின்றன. எனவே விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், தமிழக முன்னேற்றத்தை மீண்டும் உறுதி செய்யவும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Story image