மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடைபாதையில் தூங்கியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:43 pm

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சேவியா் (48). தொழிலாளியான இவா், குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் வேலை செய்து வந்தாா். தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் படுத்து தூங்குவது வழக்கமாம். தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் புல்லாவெளியைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன் (38). இவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, அதே பகுதியில் படுத்து தூங்குவாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில், சரவணன் வழக்கமாக தூங்கும் இடத்தில் சேவியா் படுத்து தூங்கி விட்டாராம். சேவியரை வேறு இடத்தில் தூங்குமாறு சரவணன் கூறினாராம். சேவியா் மறுத்ததையடுத்து சரவணன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் அவரை தாக்கினாராம்.

தகவலறிந்து வந்த மத்தியபாகம் காவல் ஆய்வாளா் மோகன்அய்யா் தலைமையிலான போலீஸாா், பலத்த காயமடைந்த சேவியரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து சரவணனை போலீஸாா் கைது செய்தனா். சரவணன் மீது ஏற்கெனவே நடைபாதையில் தூங்கியவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.