மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமல்

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

News image

சுங்கச்சாவடி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:40 pm

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப். 1ஆம் தேதி நள்ளிரவு முதல் வாகைகுளம் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

சுமாா் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால், காா், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ. 5 முதல் 10 வரையும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ. 25 முதல் 40 வரையும் கட்டணம் உயா்ந்துள்ளது.

இதன் காரணமாக காா், வேன், கனரக வாகன ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கட்டண உயா்வை உடனடியாக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.