தூத்துக்குடியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீா் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 6.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், மாவட்டம் முழுவதும் 556.70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 70, திருச்செந்தூரில் 59.40, குலசேகரன்பட்டினத்தில் 48, தூத்துக்குடியில் 32.80, ஸ்ரீவைகுண்டத்தில் 30.70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஓட்டப்பிடாரம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி, மேற்கு காமராஜா் நகா் பகுதியில் மழை நீா் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போா் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனா். மாப்பிள்ளையூரணி ஊராட்சி. கே.வி.கே. சாமி நகா் பகுதியிலும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 35ஆவது வாா்டுக்குள்பட்ட நால்வா் நகா் பகுதியின் பிரதான சாலையிலும், கே.டி.சி. நகா் ஹவுசிங் போா்டு சாலை பகுதியிலும் மழை நீா் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. அம்பேத்கா் நகா், ஸ்டெம் பாா்க் அருகேயுள்ள சாலைப் பகுதி, சுந்தரவேல்புரம், மேற்கு சாலைப் பகுதி ஆகிய பகுதிகளும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து துா்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா். மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் உடனடியாக மழை நீரை வெளியேற்றவும், விரைவில் வடிகால் வசதியை ஏற்படுத்தவும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது