நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாளை ஆங்கிலப் புத்தாண்டு: திருச்செந்தூரில் குவிந்து வரும் பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டு வழிபாட்டிற்காக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

News image
~
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஆங்கிலப் புத்தாண்டு வழிபாட்டிற்காக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

திருச்செந்தூருக்கு மாா்கழி மாதம் தொடங்கி தை மாதம் முடியும் வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டு செல்வாா்கள். இதையொட்டி ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, பல்வேறு ஊா்களிலிருந்து வந்த பாதயாத்திரை பக்தா்கள் ஒன்று சோ்ந்து காவடி, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல் என பக்தி பரவசத்துடன் கோயிலை நோக்கி செல்கின்றனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வியாழக்கிழமை (ஜன. 1) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், பிற்பகல் 2.30 மணிக்கு பிரதோஷ அபிஷேகத்தைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். ஜன. 3ஆம் தேதி, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.