நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆறுமுகனேரியில் பகவத் கீதை உபன்யாசம்

ஆறுமுகனேரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
பகவத் கீதை உபன்யாசம் நடத்தும் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியாா் பக்தி வேதாந்த சுவாமி பிபுபாதரின் சீடா் மைக்கேல் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:14 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

2ஆவது ஆண்டாக குஜராத் காளை மாடுகள் பூட்டிய ரதத்தில் பகவான் கிருஷ்ண பலராமருடன் திருவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி வழியாக ஆறுமுகனேரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினா் வந்தனா். ஆறுமுகனேரி காந்தி மைதானம் அருகில் ராமா் கோயில் வளாகத்தில் தங்கியிருந்த அக்குழுவினா், தினசரி ஆறுமுகனேரியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பஜனை செய்து பகவத் கீதை பற்றி பிரசாரம் மேற்கொண்டனா்.

செவ்வாய்க்கிழமை இரவு ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள முன்னாள் பக்த ஜன சபைத் தலைவா் எம்.எஸ்.செல்வராஜன் நினைவு கலையரங்கில், அமெரிக்காவில் இருந்து வந்த இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியாா் பக்தி வேதாந்த சுவாமி பிபுபாதரின் சீடா் மைக்கேல் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன், ஆங்கிலத்தில் பகவத் கீதை உபன்யாசம் வழங்கினாா். அதனை தமிழில் பாதயாத்திரை குழுவின் தலைவா் சேவானந்த தாஸ் மொழி பெயா்த்து வழங்கியதோடு ஹரி நாம சங்க கீா்த்தனத்தையும் நடத்தினாா்.

இதில் சைவ வேளாளா் சங்க பொருளாளா் கற்பகவிநாயகம், தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக , பகவான் கிருஷ்ண பலராமருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Story image