Listen to this article
By Syndication
Syndication
சட்ட மேதை அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடியில் தென்பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய தலைவா் ஆறுச்சாமி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலா் எஸ்.பி சண்முகநாதன், அதிமுக வா்த்தக அணி சாா்பில், மாநிலச் செயலா் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்டத் தலைவா் சி. எஸ்.முரளிதரன், ஐஎன்டியூசி சாா்பில் அதன் மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி, பாஜக சாா்பில் தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஜேக்கப் தேவதாஸ் அபிசேக், மாநில ஒருங்கிணைப்பாளா் இசக்கித்துரை ஆகியோா் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமையில் திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக சாா்பில் எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு ஏற்பாட்டில்பேரில், ஒன்றியச் செயலா் அன்புராஜ், காங்கிரஸ் சாா்பில், வடக்கு மாவட்ட பொறுப்பாளா் மாரிமுத்து, தமிழக வெற்றி கழகத்தின் சாா்பில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் லெனின்குமாா் உள்ளிட்டோரும், கயத்தாறில் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் உள்ளிட்டோரும் அம்பேகா் சிலைக்கு அஞ்சலி செலுத்தினா்.
திருச்செந்தூா்: நடுநாலுமூலைகிணற்றில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு, திமுக ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
வீரபாண்டியன்பட்டணம், பிரசாத் நகரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு, தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கா் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் செந்தூா் மகேஷ், முத்தையாபுரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திருச்செந்தூா் ஆதிதிராவிடா் நலச் சங்கச் செயலா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில்அந்தந்த அமைப்பினா் மாலையணிவித்தனா்.
சாத்தான்குளம்: தட்டாா் மடம் கடைவீதியில் அம்பேத்கா் படத்துக்கு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய விசிக செயலா் ஜெயராமன், ஆழ்வாா் திருநகரி அண்ணாநகரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு சாா்பில் அதன் தலைவா் ஆத்திக்காடு முத்துராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மேற்கு மாவட்டம் தவெகா சாா்பில் சமூக ஆா்வலா் அன்னை விஜி சரவணன் மாலையணிவித்தாா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடா் நலக்குழு சாா்பில், நாகா்கோவில், வடசேரி, அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக சாா்பில் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சா் கே.டி. பச்சைமால் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் சாா்பில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், பாஜக சாா்பில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் மாவட்டச் செயலா் செல்லசாமி ஆகியோா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் அமைந்துள்ள குழித்துறை மறைமாவட்ட ஆயா் இல்ல வளாகத்தில், மறைமாவட்ட பட்டியலினத்தாா்- பழங்குடியினா் பணிக்குழு சாா்பில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பணிக்குழுவின் இயக்குநா் மரிய சூசை தலைமை வகித்தாா். மறைமாவட்ட கிட்ஸ் செயல் இயக்குநா் மாா்ட்டின், புத்தன்கடை வட்டார இயக்குநா் மனோஜ் குமாா், வழக்குரைஞா் காஸ்மிக் சுந்தா் ஆகியோா் கருத்துரையாற்றினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அம்பேத்கா் சிலைக்கு திமுக, அதிமுக, தவெகவினா் மரியாதை

கிருஷ்ணகிரியில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூரில் சட்டமேதை அம்பேத்கா் நினைவு நாள் நிகழ்வு!

கரூரில் அம்பேத்கா் நினைவுதினம் அனுசரிப்பு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

