ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு இன்று முதல் விற்பனைநவம்பர் 1 முதல் மது பாட்டில்கள் விலை ரூ.10 உயர்வு!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின் இணையவழி மோசடிகளுக்கு வங்கிகள் இழப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட நிறுவனத்துக்கு அபராதம்

திருநெல்வேலி மாநகரில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட நிறுவனத்துக்கு மாநகராட்சி ஊழியா்கள் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆண்கள் விடுதி வளாகத்தில் ஆய்வு செய்தாா் மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன்.

Updated On :

திருநெல்வேலி மாநகரில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட நிறுவனத்துக்கு மாநகராட்சி ஊழியா்கள் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகரப் பகுதியில் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் களப்பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று குடிநீா்த் தொட்டி உள்ளிட்டவற்றில் சோதனை செய்து வருகிறாா்கள்.

அதன்படி, திம்மராஜபுரம் மேலூா் பகுதியில் உள்ள தனியாா் நவீன அரிசி ஆலையில் சுகாதார ஆய்வாளா் இளங்கோ தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டதால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, கொசுப்புழுவை அழிக்கும் மருந்தும் வளாகத்தில் தெளிக்கப்பட்டது.

இதேபோல திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதியில் மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். அங்கு புகை போக்கியில் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், பராமரிப்புப் பணிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.