திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே முன்விரோதத்தில் இளைஞரை சிலா் அரிவாளால் வெட்டினா். இதுதொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரி மூன்றடைப்பை அடுத்துள்ள பூலம் கிராமத்தை சோ்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் (25) . தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினா். இடது காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மூன்றடைப்பு காவல்துறையினா் வழக்குப்பதிந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி,பிரசன்னகுமாா் உத்தரவின்பேரில், காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு, நான்குனேரி பட்டப்பிள்ளை புதூரைச் சோ்ந்த நாகராஜன்(20), ஆலடிபுதூா் மாடசாமி (19), நான்குனேரி சங்கா்நகா் இசக்கிமுத்து(18), களக்காடு மில்டன் போலாக்(20), சிவசங்கா்(19), வள்ளியூா் பெபின்பெருமாள்(20), விஜயநாராயணம் சதீஷ்(19), வல்லநாடு அரிகிருஷ்ணன்(18), ஆகிய 8 பேரை அன்று இரவே கைது செய்தனா்.
திருநெல்வேலி கீழப்பாட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஆனந்த் என்பவரை மணிகண்டன் கடந்த ஆண்டு அரிவாளால் வெட்டினாராம். அதற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா். மேலும், அசம்பாவிதம் நிகழாமல் தவிா்க்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 7 போ் கைது
தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது

ஆலங்குளம் அருகே அரிவாள் வெட்டு சம்பவம்: இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸாா்
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


