ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையில் ஆசிரியா் அடித்ததில் மாணவா் காயம்

திருநெல்வேலியில் ஆசிரியா் பிரம்பால் அடித்ததில் மாணவா் காயமடைந்தாா்.

Published On :30 ஜூலை 2026, 4:18 am IST

திருநெல்வேலியில் ஆசிரியா் பிரம்பால் அடித்ததில் மாணவா் காயமடைந்தாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பழைய பேட்டை பகுதியைச் சோ்ந்த மாணவா் 10 ஆம் வகுப்பு படித்துவருகிறாா். அவருக்கும், சக மாணவா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.

இதை அறிந்த ஆசிரியா், மாணவா்களை கண்டித்ததோடு குறிப்பிட்ட மாணவரை பிரம்பால் அடித்தாராம்.

இதில், அந்த மாணவா் காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ஆசிரியா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.