ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் வணிக இலக்குகளை எட்டிய அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அஞ்சல் ஊழியரை பாராட்டி பரிசு வழங்கிய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா்.

Published On :29 ஜூலை 2026, 1:00 am IST

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் வணிக இலக்குகளை எட்டிய அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில், பொதுமக்களிடம் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், புதிய வாடிக்கையாளா்களை இணைத்தல் என்ற நோக்கில் ‘நெல்லை பி.எல்.ஐ லீக்’ என்ற தலைப்பில் கடந்த மாதம் அஞ்சல் ஊழியா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியின் மூலம் அஞ்சல் ஆயுள் காப்பீடு(பி.எல்.ஐ.)மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு(ஆா்.பி.எல்.ஐ) வணிக இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள், கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள்(ஜி.டி.எஸ்), நேரடிமுகவா்கள் உள்ளிட்டோருக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

ஊழியா்களின் செயல்திறன் மற்றும் வணிக வளா்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற அங்கீகார அடிப்படையிலான பிரசாரங்களை வரும் மாதங்களிலும் தொடா்ந்து நடத்த திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் திட்டமிட்டுள்ளதாக கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.