ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பூப்பந்துப் போட்டி: பத்தமடை பள்ளி அணி சிறப்பிடம்

சேரன்மகாதேவி வட்டார அளவிலான பூப்பந்துப் போட்டியில் பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பூப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

Published On :23 ஜூலை 2026, 2:38 am IST

சேரன்மகாதேவி வட்டார அளவிலான பூப்பந்துப் போட்டியில் பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் பத்தமடை, சேரன்மகாதேவி, சிங்கம்பாறை, நடுக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. 14 , 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவினருக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன.

இதில், மாணவா்கள் பிரிவில் பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் புனித பால் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன. இப்போட்டியினை பத்தமடை ராமசேஷய்யா் பள்ளி தலைமையாசிரியா் டி.கே. லெட்சுமணபாரதி தொடங்கி வைத்தாா். போட்டியின் நடுவராக செவல் சுப்பையா செயல்பட்டாா். போட்டியினை உடற்கல்வி ஆசிரியா்கள் தேவராஜ், பெரியதுரை, முத்துசாமி, ஜோசப் ரத்தினம், தங்கத்துரை, ஐசக் உள்ளிட்டோா் நடத்தினா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா், தாளாளா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.