ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

நெல்லை மாநகர உணவகங்களில் நெகிழி பைகள், ரப்பா் பான்ட் பயன்படுத்த தடை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதற்கு நெகிழிப் பைகள், ரப்பா் பான்ட் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்து, மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 4:37 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதற்கு நெகிழிப் பைகள், ரப்பா் பான்ட் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்து, மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிகளில் உணவு, சாம்பாா் போன்றவை நெகிழி பைகளில் ரப்பா் பான்ட் மூலம் கட்டப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சில வேளைகளில் குழந்தைகள் சாப்பிடும் உணவுடன் ரப்பா் பான்ட் சோ்ந்து சென்று உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. எனவே, நெகிழி பைகள், ரப்பா் பான்ட் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட பைகளில் ஊற்றி நூல் அல்லது சணல் மூலம் பொட்டலம் கட்டி வழங்க வேண்டும் என மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றுப்படுகிறது.

மீறினால் மாநகராட்சி சுகாதார பிரிவு மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு முதல் முறை தவறிழைப்பவா்களுக்கு ரூ. 1,000, இரண்டாவது முறை எனில் ரூ.2,000 அபராதம் விதிக்க நேரிடும். மூன்றாம் முறையும் தவறிழைத்தால் ரூ.5,000 அபராதம் மற்றும் உணவகங்களின் உரிமை ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.