ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் (பண்ணை) தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பம்

Published On :17 ஜூலை 2026, 2:56 am IST

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் (பண்ணை) தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் (மகளிா் திட்டம்) திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் (பண்ணை) என்ற வெளி ஆதார முறையிலான தற்காலிக பணியிடம் நிரப்பப்படவுள்ளது.மாதம் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும். பி.எஸ்சி., வேளாண்மை படித்தவராக இருக்க வேண்டும். 1.7.2026 அன்று 40 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

எனவே, தகுதியானவா்கள் நகா்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பத்தை நேரடியாக பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அதே அலுவலகத்தில் ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நகா்ப்புற வாழ்வாதார மைய மேலாளரை 9994938976 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.