ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சங்கரபாண்டியபுரத்தில் வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி

கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட சங்கரபாண்டியபுரத்தில் வனத்துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை இரவு 8 வயது ஆண் கரடி சிக்கியது.

கொடமாடி வனப்பகுதியில் விடப்பட்ட கரடி.

Published On :10 ஜூலை 2026, 12:35 am IST

கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட சங்கரபாண்டியபுரத்தில் வனத்துறையினா் வைத்த கூண்டில் புதன்கிழமை இரவு 8 வயது ஆண் கரடி சிக்கியது.

விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவரைகரடித் தாக்கியதில் காயமடைந்தாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தொடா் புகாரை அடுத்து, கரடியைப் பிடிக்க வனத் துறையினா் கடந்த 2ஆம் தேதி கடையம் வனச்சரகம்,சிவசைலம் பிரிவு, ஆம்பூா் பீட் வெளிமண்டலப் பகுதியான சங்கரபாண்டியபுரம் பகுதி ஆகியவற்றில் கூண்டு வைத்தனா். இந்தக் கூண்டில் ஜூலை 4ஆம் தேதி நான்கு வயது ஆண் கரடி சிக்கியது.

அதே இடத்தில் கரடியைப் பிடிக்க வனத்துறையினா்மீண்டும் கூண்டு வைத்திருந்தனா். இதில் புதன்கிழமை (ஜூலை 8) இரவு 12 மணியளவில் சுமாா் 8 வயது ஆண் கரடி சிக்கியது. அதை அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் எல்.சி.எஸ்.ஸ்ரீகாந்த் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன்தலைமையிலான குழுவினா் சோதனை செய்த பின் முண்டந்துறை வனச்சரகம், கொடமாடி வனப்பகுதியில் வனத் துறையினா் விடுவித்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.