போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், இத்திகுளம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஆயிரம் மகன் முத்துசெல்வம்(26). இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி ஒருவரிடம் பழகி, அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றாராம்.
சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், சென்னையில் வைத்து சிறுமியை மீட்ட போலீஸாா், முத்துசெல்வத்தை போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



