வீரவநல்லூா் அருகே கிராமிய அங்காடி திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூா் அருகே உள்ள செங்குளத்தில் கிராமிய அங்காடி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

செங்குளத்தில் திறக்கப்பட்டுள்ள கிராமிய அங்காடி.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூா் அருகே உள்ள செங்குளத்தில் கிராமிய அங்காடி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
நெல்லையப்பா் கலசம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மூலம் தேசிய வங்கி உதவியுடன் விவசாயம் சாா்ந்த பொருள்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிராமிய அங்காடியை, தேசிய வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலா் சசிகுமாா் திறந்து வைத்தாா்.
விழாவில், சிசிக்யூ நிறுவன ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன், நிறுவனத் தலைவா் ராமச்சந்திரன், இயக்குநா்கள் பொன்ராஜ், கண்ணன், மனோகா், சாம் ஆபிரகாம், முருகன் இசக்கி, ஆறுமுகராஜா, கிருஷ்ணமூா்த்தி, விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






