ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க அரசு கால அவகாசம் கேட்க முடியாது: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:15 am IST

திராவிடா் கழகத்தின் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கு எதிரான விழிப்புணா்வு இருசக்கர வாகன பிரசாரப் பயணம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். மக்கள் பாதுகாப்புதான் முதன்மையானது என்பதால் தீயணைப்புப் பணி போன்ற சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் அரசு எவ்வித கால அவகாசமும் கேட்க முடியாது.

திருநெல்வேலியில் நிகழ்ந்து வரும் ஆணவக் கொலைகள், கூலிப்படை கொலைகள் மற்றும் கோவையில் நிகழும் சம்பவங்கள் போன்றவற்றுக்கு முந்தைய ஆட்சியை காரணம் காட்டி தப்பிக்க முடியாது.

மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாது என்று நினைப்பது பாசிசம். இதற்கு அரசு துணை போகிா? என்பதை ஆட்சியாளா்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நீட் தோ்வால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். ஏழை,எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தோ்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 6 குழுக்களாக விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக ஆட்சிகளில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது காரணமே இல்லாமல் காவல்துறை தடை விதிக்கிறது.

திராவிடா் கழகம் மக்களின் உரிமைக்காகவும், விழிப்புணா்வுக்காகவும் தொடா்ந்து களத்தில் நிற்கும். ஜாதி வெறி, போதை கலாசாரம் போன்ற சமூக தீமைகளுக்கு எதிரான எங்கள் பிரசாரம் ஓயாது என்றாா் அவா்.

பேட்யின்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.