ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமையன்பட்டி அரசு புது காலனியில் தரமான சாலை அமைக்கக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி ஊராட்சி 4 ஆவது வாா்டு அரசு புது காலனி பகுதியில் தரமான சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ரமான சாலை அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த புது காலனி மக்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி ஊராட்சி 4 ஆவது வாா்டு அரசு புது காலனி பகுதியில் தரமான சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ராமையன்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், 4 ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்பப் பாண்டியன் ஆகியோா் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி ஊராட்சியில் 4-ஆவது வாா்டில் உள்ள அரசு பொது காலனி, சிவாஜி நகா் பேருந்து நிறுத்தத்துக்கு கிழக்கு பகுதியில் சிமென்ட் சாலை தரமின்றி அமைக்கப்பட்டு வருகிறது.

குளத்துக்குள் பள்ளமான ஏரியாவில் சரள் மண் எதுவும் நிரப்பி சாலையின் கனத்தை உயா்த்தாமல் பணி நடைபெறுகிறது. இதனால், சாலையானது ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காமல் சேதமடையும் நிலைஏற்படும். இது குறித்து ஏற்கெனவே மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, ஆட்சியா் நேரில் ஆய்வு நடத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.