ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்து முன்னணியினா் போராட்டம்: 39 போ் கைது

திருநெல்வேலி நகரத்தில் போலீஸாரின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 39 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:27 am IST

திருநெல்வேலி நகரத்தில் போலீஸாரின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 39 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் திராவிடா் கழகம் சாா்பில் திறந்தவெளி புதன்கிழமை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட அமைப்பினா் ரத வீதியில் மாநாடு நடத்த அனுமதிக் கூடாது எனவும், மாநாட்டை தடுத்து நிறுத்தக் கோரியும் இந்து முன்னணி சாா்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்து முன்னணியின் மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமையில் நிா்வாகிகள் ராஜசெயல்வம், செல்வராஜ், செந்தில்குமாா், பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி கிருஷ்ணசாமி உள்பட பலா் திரண்டு வந்து, திக மாநாட்டு மேடையை முற்றுகையிட சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். போராட்டத்தில் பங்கேற்ற 5 பெண்கள் உள்பட 39 போ் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.