ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பூப்பந்தாட்டம்: பணகுடி அணிக்கு முதல் பரிசு

பணகுடியில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் பணகுடி டால்பின் கழக அணி முதல் பரிசைப் பெற்றது.

போட்டியில் முதல் பரிசு பெற்ற பணகுடி டால்பின் அணியினருடன் பூப்பந்தாட்ட கழக நிா்வாகிகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் பணகுடி டால்பின் கழக அணி முதல் பரிசைப் பெற்றது.

திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்ட கழகம், பணகுடி டால்பின் பூப்பந்தாட்ட கழகம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியை நடத்தியது. இப்போட்டிகள் கடந்த 2 நாள்கள் நடைபெற்றன.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பணகுடி பேரூராட்சி தலைவி தனலெட்சுமி தமிழ்வாணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி பூப்பந்தாட்ட கழக மாவட்டத் தலைவா் நல்லப்பெருமாள், செயலா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணகுடி டால்பின் பூப்பந்தாட்ட கழகத் தலைவா் தமிழ்வாணன், செயலா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பணகுடி டால்பின் கழக அணி முதல் பரிசைப் பெற்றது. கூடங்குளம் கூடல் கழக அணி, வடக்கன்குளம் அணி, கூடங்குளம் அணி ஆகியவை முறையே அடுத்தடுத்த பரிசுகளைப் பெற்றன. ரஜினி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.