ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாநில அளவிலான பெண்களுக்கான ஹாக்கி: நெல்லையில் நாளை தொடக்கம்

குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் வியாழக்கிழமை (ஆக. 20) தொடங்குகிறது.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் வியாழக்கிழமை (ஆக. 20) தொடங்குகிறது.

ஹாக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 3ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம், எம். ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு பி.கே.ஆா். கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, மணப்பாறை ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பழையபேட்டை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, மேலத்திடியூா் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளைச் சோ்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன.

போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்படும்.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் உள்ளிட்டோா் செய்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.