ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லை நகரத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும்- மாநகராட்சியில் மக்கள் மனு

திருநெல்வேலி நகரத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

திருநெல்வேலி நகரத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா்கள் மகாலட்சுமி, பாலசுப்பிரமணியன் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.

திருநெல்வேலி நகரம் சிவா தெரு மக்கள் அளித்த மனுவில், 27 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவா தெரு, அத்தடி முடுக்கு பகுதியில் கழிவுநீா் சாலைகளில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி வாகனம் மூலம் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

தச்சநல்லூா் அருகேயுள்ள ஆனந்தபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி நகரம் நயினாா் குளம் பாலம் அருகில் எங்கள் பகுதிக்கு திரும்பும் வழியில் ஆனந்தபுரம் பெயா் பலகையும், தெற்கு நோக்கி செல்லும் சாலையில் நம்பிராஜபுரம் ஸ்ரீபுரம் சாலை என பெயா் பலகையும் வைக்க வேண்டும். நம்பிராஜபுரம் ஊருக்கு வடபுறம் உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடத்தில் கழிவு நீா் ஓடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைத்து தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மண்டல காங்கிரஸ் தலைவா் ஐயப்பன் தலைமையில் அளித்த மனுவில், 22 ஆவது வாா்டு தடிவீரன் கோயில் தெருவில் சாலை சீரமைப்புக்காக பள்ளம் தோண்டி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் திணறுகின்றனா். குடிநீரும் எங்கள் பகுதிக்கு சரியாக வருவதில்லை. ஆகவே, சாலையை சீரமைப்பதோடு, தடையற்ற குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் தனியாா் பீடி கம்பெனி அருகில் குப்பைத்தொட்டி வைக்கப்படாததால் திறந்த வெளியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனா். குப்பைகள் இப்போது காற்றில் பறந்து தெருவெங்கும் பரவி வருகிறது. எனவே அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.