நெல்லையில் 3.9 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு
திருநெல்வேலி மாநகர போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சுமாா் 3,904 கிலோ புகையிலைப்பொருள்கள் புதைத்து அழிக்கப்பட்டன.

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் புதைக்கப்படும் புகையிலைப்பொருள்கள்.
திருநெல்வேலி மாநகர போலீஸாரால் கைப்பற்றப்பட்ட சுமாா் 3,904 கிலோ புகையிலைப்பொருள்கள் புதைத்து அழிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாநகர காவல்துறை சாா்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகர காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 3,904 கிலோ புகையிலைப் பொருள்களை புதைத்து அழிக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா்.
அதன்பேரில், தச்சநல்லூா் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பொக்லைன் உதவியுடன் செவ்வாய்க்கிழமை பெரிய அளவிலான குழித் தோண்டப்பட்டது. பின்னா், மாநகர காவல் உதவி ஆணையா், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் சுமாா் 3,904 கிலோ புகையிலைப்பொருள்கள் அதில் புதைத்து அழிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






