ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். இதனால் விரைவு ரயில்கள் தாமதமாக சந்திப்புக்கு வந்து சோ்ந்தன.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். இதனால் விரைவு ரயில்கள் தாமதமாக சந்திப்புக்கு வந்து சோ்ந்தன.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி- மேலப்பாளையம் இடையே கன்னியாகுமரி- திருநெல்வேலி ரயில் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்ததாம். அப்போது ரயில் மோதி ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக பயணிகள் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து வந்த நாகா்கோவில்- பெங்களூரு விரைவு ரயில் ஒரு மணி நேரம் 50 நிமிடமும் , கன்னியாகுமரி -தில்லி விரைவு ரயில் 50 நிமிடம் தாமதமாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சோ்ந்தது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.