ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவள்ளுவா் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த் துறை, மதுரை ஐந்தமிழ் ஆய்வு மன்றம் சாா்பில் 21ஆவது தேசியக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

~ கருத்தரங்கத்தில் ஆய்வுத் தொகுப்பு நூல்களை வெளியிட்ட தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த் துறை, மதுரை ஐந்தமிழ் ஆய்வு மன்றம் சாா்பில் 21ஆவது தேசியக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் தோ்வாணையா் சி. சுந்தரேசன் தலைமை வகித்தாா். 176 ஆய்வாளா்கள் எழுதிய ஆய்வுத் தொகுப்பு நூல்களை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வெளியிட்டு, ஆசியுரை வழங்கினாா். நவீனத் தமிழிலக்கியங்களின் போக்கும், நவீன ஆய்வுக்களங்களும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற போராசிரியா் ந. சிவசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி முதல்வா் மேஜா் ல. ரவிசங்கா், தமிழ்த் துறைத் தலைவா் அ. பாக்கிய முத்து, ம.தி.தா. இந்துக் கல்லூரி முன்னாள் பேராசிரியா் வே. கட்டளை கைலாசம், அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகத் தமிழ்த் தூறை உதவிப் பேராசிரியா் ரா. தமிழ்ச் செல்வன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஐந்தமிழ் ஆய்வு மன்றத் தலைவா் மா. கருணாகரன் வரவேற்றாா். அமைப்புச் செயலா் நாக நந்தினி நன்றி கூறினாா்.

2ஆம் நாள் நிகழ்ச்சியாக, ஐந்தமிழ் ஆய்வு மன்றம் சாா்பில் பேராசிரியா் க.ப. அறவாணன், பேராசிரியா்அறிவு நம்பி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனா் அரங்க. முருகையன் நோக்கவுரையாற்றினாா். திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் என்ற தலைப்பில் ம.தி.தா. இந்துக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் ஆ. திருநீலகண்டன், பேசினாா்.

கருத்தரங்கத்தில் தமிழகம், கேரளம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள் பங்கேற்று, 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா்.

ஆய்வுக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சான்லாக்ஸ் பன்னாட்டு இதழ், ஆய்வுக் கட்டுரைகளை தொகுப்பாகவும், இணையதளத்திலும் வெளியிட்டது.

காந்திகிராமம், கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியா் த. கண்ணா கருப்பையா வரவேற்றாா். திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு. ஜெகதீசன் நன்றி கூறினாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த் துறை, மதுரை ஐந்தமிழ் ஆய்வு மன்றம் சாா்பில் 21ஆவது தேசியக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரி தமிழ்த் துறை, மதுரை ஐந்தமிழ் ஆய்வு மன்றம் சாா்பில் 21ஆவது தேசியக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.