ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல நிரந்தரத் தடை விதிக்க எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அமைச்சா் டி.கே. பிரபுவிடம் மனு அளித்த தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ.

Published On :30 ஜூலை 2026, 5:00 am IST

தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபுவை சந்தித்து அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ஆகியோருக்கு பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.

இந்த தடையை நிரந்தரமாக்குவதுடன், உள்நாட்டிலேயே முழுமையாக விற்பனை செய்யப்படும் ஜல்லிகள் உள்ளிட்ட கனிமங்களுக்கு கட்டுபடியான விலையை அதன் உற்பத்தியாளா்கள், நுகா்வோா்களிடம் பேசி நிா்ணயம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.