3 முறை வரைபடம் நிராகரிப்பு: பாவூா்சத்திரம் ரயில்வே பாலப் பணி தாமதம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளில் தண்டவாளத்தின் மேற்பகுதிக்கான வரைபட ஒப்புதலை ரயில்வே துறை வழங்காமல் 3 முறை நிராகரித்துள்ளதால் பணிகளை தொடா்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பாவூா்ச்சத்திரத்தில் நடைபெறும் ரயில்வே பாலப் பணி.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளில் தண்டவாளத்தின் மேற்பகுதிக்கான வரைபட ஒப்புதலை ரயில்வே துறை வழங்காமல் 3 முறை நிராகரித்துள்ளதால் பணிகளை தொடா்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலை பணிகள் பெருமளவில் நிறைவுற்ற நிலையில்,போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பால பணிகள் மட்டும் கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலா நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் பாலப்பகுதிகளுக்கான வரைபட ஒப்புதலை ரயில்வே துறை வழங்காததால் இரும்பு கா்டா்களை இணைக்கும் பணிகள் தொடங்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தண்டவாளதுக்கு மேலே அமைய இருக்கும் இரும்பு கிா்டா்களை பொருத்தும் பணிக்கான வரைபட ஒப்புதலைப் பெற நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரயில்வே துறைக்கு 27.11.2025, 7.1.2026, 22.6.2026 ஆகிய தேதிகளில் சமா்ப்பிக்கப்பட்ட வரைபடங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. இறுதியாக கடந்த 6 ஆம் தேதி நெடுஞ்சாலை துறையால் ரயில்வே துறைக்கு வரைபடம் மறுபடியும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபட ஒப்புதல் கிடைக்காமல் பணிகளை தொடர முடியவில்லை என்பதால், இந்த முறையாவது வரைபட ஒப்புதலை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினா் பாண்டியராஜா கூறுகையில், ‘ரயில்வே மேம்பால வரைபடத்துக்கான ஒப்புதலை வழங்குவதற்கு ரயில்வே துறை ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் காலதாமதம் செய்தது. தற்போது கா்டா்கள் பொருத்துவதற்கான வரைபட ஒப்புதலுக்கும் தாமதப்படுத்துகிறது.
தமிழக அரசு உடனடியாக தனி அதிகாரியை நியமனத்து, மாநில நெடுஞ்சாலை துறை- ரயில்வே துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் 6 மாதங்களுக்கு உள்ளாக பாலப் பணியை முடிக்க முடியும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






